1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 மே 2025 (15:13 IST)

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்திய நிலையில், நேற்றே கராச்சி பங்கு சந்தை படுமோசமாக சரிந்தது.
 
இந்த நிலையில், இன்றும் கராச்சி பங்கு சந்தை அதள பாதாளத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. கராச்சி பங்குச் சந்தை இன்று பிற்பகல் 1:30 மணிக்கு மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நேற்று சுமார் 6,500 புள்ளிகள் வரை வீழ்ந்த நிலையில், இன்றும் 7,000க்கும் அதிகமான புள்ளிகள் வரை விழுந்ததாகவும், இது பாகிஸ்தான் பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக அதிகபட்ச வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.
 
இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும், பிற்பகல் 1:30 மணிக்கு பங்குச் சந்தை மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஆனால் அதே நேரத்தில், இந்திய பங்குச் சந்தைக்கு எந்தவிதமான பெரிய பாதிப்பும் இல்லை என்றும், இந்திய பங்குச் சந்தை இன்று 200 புள்ளிகள் சரிந்திருந்தாலும், அது மிகப்பெரிய அளவில் பாதிப்பு அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva