1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (06:37 IST)

கன்சாஸ் இந்தியரை கொன்ற கொலையாளிக்கு 50 ஆண்டுகள் சிறை?

இந்திய பொறியாளர் சீனிவாசன் சமீபத்தில் அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் இனவெறியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான ஐதராபாத் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.




இந்நிலையில் சீனிவாசனை சுட்டு கொலை செய்த கொலையாளியும் கடற்படை வீரருமான 51 வயது ஆடம் பூரிண்டன் என்பவரிடம் போலீஸார் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆடம் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு அதிகபட்சதண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க அடைக்கப்பட்டுள்ள ஆடமிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நீதிபதி விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆடம் கொலைக்கு நேரில் பார்த்த சாட்சி, சிசிடிவி கேமிரா உள்பட ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு  50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று அரசு வழக்கறிஞர் ஸ்டீவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.