வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (20:19 IST)

உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்­று நகைக்கடையில் கொள்ளை [வீடியோ]

மினுவாங்கொடையில் கொள்ளையர்கள் கடையின் உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்­று நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
 
இலங்கையில் உள்ள மினு­வாங்­கொடை பழைய சந்தை கட்­டிடத் தொகு­தியில் மொஹைதீன் தங்க நகை விற்­பனை நிலையம் எனும் பெயரில் நகைக்கடை ஒன்று உள்­ளது. குறித்த நகைக்­க­டைக்கு நேற்று மாலை 6.45 மணிக்கு இரு மோட்டார் சைக்­கிள்­களில் நான்கு பேர் வந்துள்­ளனர்.
 
அவர்­களில் இருவர் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்­தி­ருந்­துள்­ள­துடன் ஏனைய இரு­வரும் தமது முகத்தை துணியால் சுற்றி மறைத்த வண்ணம் இருந்­துள்­ளனர். திடீரென கடைக்குள் புகுந்த இவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி அச்­சு­றுத்தியுள்ளனர்.
 
மேலும், கடையில் உள்ள நகை­க­ளையும் பணத்­தி­னையும் கொள்ளையிட ஆரம்­பித்­துள்­ளனர். இதன் போது கடையின் உரிமையா­ள­ரான மொஹைதீன் என்­ப­வரும் கடையின் சேவையாளர்களான மேலும் மூவரும் நோன்பு திறந்த வண்ணம் இருந்­துள்­ளனர்.
 
கொள்­ளை­யர்கள் இவ்­வாறு திடீ­ரென புகுந்து கொள்­ளை­ய­டிப்­பதை பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது கொள்­ளை­யர்­களில் ஒரு­வரை உரிமை­யாளர் மொஹைதீன் பாய்ந்து பிடிக்க முற்­பட்­டுள்ளார். இதனைய­டுத்து கொள்­ளை­யர்­களில் ஒருவர் சராமா­ரி­யாக துப்­பாக்கி சுட்டுள்ளனர்.
 
இதில், கடையின் உரி­மை­யா­ளரும், கடையில் பணிபுரியும் ஊழியரும் கடு­மை­யான காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். பின்னர் கொள்ளையிட்ட நகைகள் பணத்­துடன் கொள்­ளை­யர்கள் தப்பிச் சென்றுள்­ளனர். இத­னை­ய­டுத்து காய­ம­டைந்த இரு­வரும் மினுவாங்கொடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
ஆனால், மொஹைதீன் உயிரிழந்திருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்த கடையின் ஊழியர் தொடர்ந்து மினுவாங்கொடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.