1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (10:48 IST)

டாப் கியர் நிகழ்ச்சியில் இருந்து ஜெரமி கிளார்க்ஸன் நீக்கம்

பிபிசியின் பிரபல நிகழ்ச்சியான டாப் கியர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜெரமி கிளார்க்ஸனை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்குவதாக பிபிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.



இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களில் ஒருவரை ஜெரமி கிளார்க்ஸன் கடுமையாக திட்டியதோடு, கைநீட்டி அடித்தார் என்பதனாலேயே அவரை அந்த நிகழ்சியில் இருந்து நீக்குவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
 
இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் ஏற்கத்தக்க எல்லைக்கோட்டை கிளார்க்சன் மீறிவிட்டார் என்றும், ஆளுக்கொரு அளவுகோளை பிபிசியால் கடைபிடிக்க முடியாது என்றும் பிபிசியின் நிர்வாக இயக்குநர் டோனி ஹால் தெரிவித்துள்ளார்.
 
ஜெரமி கிளார்க்சன் அபூர்வமானதொரு திறமையாளர் என்றும், டாப் கியர் நிகழ்ச்சியில் அவர் இவ்வகையில் நீக்கப்படுவது பலரை வருத்தமடையச் செய்யும் என்றும் அவரால் தாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒயிசின் டைமன் தெரிவித்துள்ளார்.
 
பணியிடத்தில் மிரட்டப்படும், வன்முறையை எதிர்கொள்ளும் அனைத்துப்பணியாளர்களையும் பிரிட்டனின் சட்டம் பாதுகாக்கும் என்பதற்கு இந்த சம்பவம் முக்கிய சாட்சியாக இருக்கும் என்று டைமனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.