1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 30 ஜூலை 2014 (12:38 IST)

ஜப்பானில் அணு குண்டு வீசிய விமானி 93 ஆவது வயதில் மரணம்

ஜப்பான் ஹீரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம் அடைந்தார், அணு குண்டு வீசியதற்காக அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணுகுண்டு துயர சம்பவங்கள் மறக்க முடியாத மாபெரும் துயர சம்பவமாகும்.

கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9 ஆம் தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் அந்த இரு நகரங்களிலும் ஏற்பட்ட துயர சம்பவங்கள் மிகவும் கொடூரமானவை. உலக வரலாற்றில் மிக மோசமான இந்த துயர சம்பவத்தில் அமெரிக்காவின் செயல்கள் மறக்க முடியாதவை.
ஜப்பானின் ஹிரோஷி மாவில் ‘லிட்டில் பாய்’என்ற அணு குண்டை வீசிய அந்தக் குழுவில் 24 வயது நிரம்பிய தியோடர் வன்கிர்க் என்ற விமானியும் இடம் பெற்றிருந்தார். நெதர்லாந்தை சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார்.

ஜார்ஜியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த அவர் தனது 93 ஆவது வயதில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “அவரை இரண்டாம் உலகப்போரின் ‘ஹீரோ’ என்பார்கள். என்னை பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல தந்தையாக இருந்தார். குண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை". என்று தெரிவித்துள்ளார்.