1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (17:11 IST)

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் நிச்சயம் அழிக்கப்படுவார்கள் - சீனா சபதம்

சீனா நாட்டினை சேர்ந்தவர்களை பிணைக்கைதியாக வைத்திருந்த ஒருவரை கொன்றதனை அடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அழிக்கப்படுவார்கள் என சீனா உறுதி பூண்டுள்ளது.
 

 
இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ள சீன அரசு ’கொடுமையான மரணம்’ என்று தெரிவித்துள்ளதோடு, இவர்கள் ’நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.
 
அதேபோல நார்வே நாட்டை சேர்ந்த ஒருவரையும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் கொலை செய்துள்ளனர். முன்னதாக இந்த இருவரின் சடலங்கள் எனக் கூறி அந்த ஜிகாதிக் குழு புகைப்படங்களை வெளியிடிருந்தது.
 
எனினும் எங்கே அல்லது எப்போது அந்தக் கொலை நடைபெற்றன என்பது பற்றி ஐ எஸ் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை.
 
மேலும் இது குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் செயல்படும், தீவிரவாத அமைப்புகள், நிச்சயமாக ஈவு இரக்கமின்றி, தயவுதாட்சனை இன்றி ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், “தீவிரவாதம் அனைத்து விதமான மனித நடவடிக்கைகளுக்கும் எதிரானது. அனைத்து விதமான தீவிரவாத சிந்தனைகளையும் சீனா உறுதியாக எதிர்கிறது. மனித தன்மையை நிறுவும் பொருட்டு, எடுக்கப்படும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.