வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (17:42 IST)

ஐஸ்ஐஸ் அமைப்பின் தலைவர் உயிருடன் இருக்கிறார் - உலகம் முழுவதும் ஜிகாதி எரிமலைகள் தாக்குதல் நடத்த அழைப்பு

ஐஎஸ்ஐஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் உலகம் முழுவதும் ஜிகாதி எரிமலைகள் தாக்குதல் நடத்த அல்-பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார்.
 
கடந்த வாரம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் ஐஎஸ்ஐஸ் இயக்க தலைவர்களின் கூட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
 
இந்த தகவலை ஈராக்கின் பாதுகாப்புத் துறையும் ஐஎஸ்ஐஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களும் உறுதிப்படுத்தும் விதமாக தகவல்கள் தெரிவித்தனர்.
 

 
இந்நிலையில் அல்-பாக்தாதி 17 நிமிடங்கள் பேசக்கூடிய ஆடியோ ஒன்றை ஐஎஸ்ஐஸ் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த ஆடியோ உண்மையானது என்று நிபுணர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதில் பாக்தாதி, சவுதி அரேபியா, ஏமன், எகிப்து மற்றும் உலகம் முழுவதும் ஜிகாதி எரிமலைகள் தாக்குதல் நடத்த போராளிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
 
மேலும், ஐ.எஸ். போராளிகள் இறுதி வரை போராடுவார்கள். அமைப்பில் கடைசி வீரர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்நிலயில் இந்த ஆடியோ வெளியானவுடன் மேலும் 1500 துருப்புகளை ஈரானுக்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்துள்ளார்.