வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 15 அக்டோபர் 2016 (17:32 IST)

58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கமாண்டர்கள் உட்பட 58 பேரை தண்ணீரின் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.
 

 
சிரியா, இராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து “இஸ்லாமிய அரசு” எனும் புதிய நாட்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக்கி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். தனிநாட்டை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல கொடூர சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை பதிவேற்றி மிரட்டுவது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, மனித வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்வது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது என ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் உலகத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.
 
இதன் ஒரு பகுதியாக ஈராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு மொசூல் நகரை கைப்பற்றினர். ஆனால், அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் ஈராக் இராணுவம் மெகசூல் நகரில் தாக்குதல் நடத்தி அந்நகரை மீண்டும் கைப்பற்றியது.
 
இதன் காரணமாக, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ஈராக இராணுவத்திற்கு உதவிய கமாண்டர்கள் உட்பட 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ய உத்தரவிட்டார். இதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து அவர்களை ஒரே இடத்தில் புதைத்தனர்.