முஸ்லீம் நாட்டை சேர்ந்தவர்கள் குடியேற தடை: பிரபல நடிகை எதிர்ப்பு


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 27 ஜனவரி 2017 (14:30 IST)
அமெரிக்காவில் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பிக்க உள்ளதால், ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஆஸ்கார் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

 

 
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு புதிய சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, சூடான், ஈராக், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுவதற்கும் தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுதிட உள்ளார்.
 
இந்நிலையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை டரானே அலிடூஸ்ட்டி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்க புதிய கட்டுபாடுகளை விதிக்கும் அதிபர் டெனால்டு டிரம்பின் இந்த செயல் மதவாத அடிப்படையிலானது. இந்த நடவடிக்கை கலாச்சார விழாக்களுக்கு பொருந்தினாலும், பொருந்தாவிட்டாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்கர் விழாவில் பங்கேற்க மாட்டேன், என குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :