வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Modified: சனி, 12 டிசம்பர் 2015 (18:00 IST)

பருவநிலை மாற்றம் தொடர்பாக வரைவு அறிக்கை நிறைவேற்றப்பட்டது

பிரான்சில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் அனைத்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான வரைவு அறிக்கை ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்பட்டது.



பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு பிரான்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டின் பிரதிநதிகள் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இந்த மாநாட்டில் இந்திய சார்பாக மோடி பங்கேற்றார். உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்பட்டது.

பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பமடைந்து வருவது குறித்து உலக நாடுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால், இது தொடர்பாக நாடுகளுக்கிடையே எந்த முடிவையும் எட்டும் நிலை இதுவரை உருவாகவில்லை.

இந்நிலையில், பிரான்சில் கடந்த பத்து நாட்களாக நடந்த மாநாட்டில், உலக நாடுகள் அனைத்துக்கும் ஏற்று கொள்ளும் வகையில் கொள்கை முடிவுகள் எட்டப்பட்டது. இதற்கான வரைவு அறிக்கையை, மாநாட்டின் தலைவரும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருமான லாரென்ட் ஃபேபியஸ் மாநாட்டில் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், உலக சுற்றுச்சூழலைக் காப்பதில் முக்கிய நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.