கனடாவில் இந்திய மாணவி சுட்டுக் கொலை

கனடாவில் இந்திய மாணவி சுட்டுக் கொலை

Suresh| Last Updated: திங்கள், 2 மே 2016 (10:44 IST)
கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம், மகபூப் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ஜான் கிருபாவரம். இவரது மகள் சிந்தியா முல்லாபுடி.
 
இவர் கனடா நாட்டில் படித்து வந்தார். இந்நிலையில், அங்குள்ள ஒரு  பார்க் அவின்யுவிலுள்ள வணிக வளாகத்திற்கு, ஒரு காரில் 3 பேருடன் சென்றுள்ளார்.
 
அப்போது, அவர்களது காரை நோக்கி வந்த ஒரு மர்ம நபர், அந்த காரில் இருந்த ஒரு ஆணை குறி வைத்து சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிந்தியாவும், ஜோசப் அன்ஜோலோனா என்பவரும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திவேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்த தாக்குதலில், மற்ற  2 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இந்த துப்பாக்கிச்சூடு மிகவும் அருகாமையில் இருந்து குறி வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கொலை சம்பவம் குறித்து, அந்த வணிக வளாகத்தின் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதில் மேலும் படிக்கவும் :