வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 31 மார்ச் 2016 (12:04 IST)

ஓராண்டில் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்

இந்தியாவில் இருந்து 2015 ஆம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறி அயல்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர்.


 

 
நியூ வேல்ட் வெல்த் என்ற நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின் படி உலக அளவில் பிரான்சில்தான் கடந்த ஆண்டில் அதிக அளவில் 10 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர்.
 
இதற்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு 9 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர்.
 
அதற்கு அடுத்தப்படியாக இத்தாலி நாட்டின் பெரும் பணக்காரர்கள் 6 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
 
பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் உலக அளவில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது.
 
பெரும் பணக்காரர்கள் தங்கள் நாட்டிற்குள் வரும் வருகையை பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு மட்டும் 8 ஆயிரம் பணக்காரர்கள் குடியேறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 7 ஆயிரம் பணக்காரர்களும், கனடாவில் 5 ஆயிரம் செல்வந்தர்களும் உலகம் முழுவதும் இருந்து குடியேறியுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.