திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 மே 2025 (17:03 IST)

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!
இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது. இந்த தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஏராளமான ஆயுதங்களும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இறந்த தீவிரவாதிகளின் உடல்களுக்கு  இறுதிச்சடங்குகள் செய்யப்படும்போது, பாகிஸ்தானின் தேசிய கொடி உடல்களுக்கு  மேல் பொருத்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதன் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல், பாகிஸ்தான் ராணுவம் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்த காட்சிகளும் அதில் உள்ளன. இதன் மூலம் உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் இன்னும் தீவிரவாதிகள் மீது ஆதரவு தரும் நிலையை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இனிமேலாவது உலக நாடுகள் சுதாரித்து பாகிஸ்தான் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva