அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த நிர்வாக உத்தரவை எதிர்த்து, இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ஸ்மிதா கோஷ் உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அரசியல் சாசன பொறுப்புணர்வு மையத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், 14-வது அரசியலமைப்பு திருத்தம் வழங்கும் பாதுகாப்பை இந்த உத்தரவு மீறுவதாக வாதிடுகிறார். குடியேற்ற சட்ட நிபுணரான ஸ்மிதா, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். பெற்றோரின் குடியேற்ற...