வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2016 (13:04 IST)

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்: இந்தியாவுடனான உறவில் சிக்கலா? அமெரிக்கா விளக்கம்

பாகிஸ்தானுக்கு எப் 16 ரக போர் விமானங்களை விற்க அமைரிக்க முடிவு செய்திருப்பதால் இந்தியாவுடனான அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.


 

 
பாகிஸ்தானுக்கு எப் 16 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்தது.
 
மேலும், அமெரிக்காவின் மத சுதந்திர கண்காணிப்புக் குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது.
 
இந்த விவகாரங்களால், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது. ஆனால் இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், "இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவை தொடர்வதையே நாங்கள் விரும்புகிறோம். 
 
இந்தியாவுடன் சுமூக உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலை நான் ஏற்கவில்லை. 
 
இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான விவகாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையே பொதுவான பிரச்சினைகள், சவால்கள், அச்சுறுத்தல்கள் உள்ளன.  
 
நரேந்திர மோடி அரசுடனும், நேர்மையான, தெளிவான உறவை அமெரிக்கா கொண்டுள்ளது. இது தொடர வேண்டும் என்றும் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
 
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளை இந்த வாரம் சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவு, பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு முதலிய பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
 
இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது. அமெரிக்க குழுவின் விசா தொடர்பாக நமது கவலைகளை பல்வேறு வழிகளில் தெவித்துள்ளோம்" என்று ஜான் கெர்பி கூறினார்.