வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 26 டிசம்பர் 2014 (21:17 IST)

விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் - இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரிம்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீரல்கள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு தர மறுத்தால் பின், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷே தனது தேர்தல் பிரச்சாரத்தில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், ஐநா செய்தித் தொடர்பாளர் கூறிகையில், ஐநாவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கடமையாகும். இதை மகிந்த ராஜபக்‌ஷேவிடம் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் எப்போதும் கூறி வந்துள்ளார்.
 
இலங்கை அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் பின், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.