வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (18:10 IST)

அகதிகளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? - வாக்கெடுப்பிற்கு அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தி பிரிட்டன் முடிவு செய்தது போன்று, அகதிகளை ஏற்றுக் கொள்வது பற்றிய பொது வாக்கெடுப்பு நடத்தப்போவதாக ஹங்கேரி அறிவித்திருக்கிறது.
 

 
எவ்வளவு அகதிகளைக் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்கும் நிர்ணயித்துள்ளது. அந்தந்த நாடுகளில் நாடாளுமன்ற ஒப்புதல் இதற்குத் தேவையில்லை என்றும் ஐரோப்பிய யூனியன் கூறியிருக்கிறது.
 
நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா என்று கேள்வியை மக்கள் முன் வைக்கப்போவதாக ஹங்கேரியின் ஜனாதிபதி ஜேன்ஸ் அடெர் கூறியுள்ளார்.