வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 7 ஜூன் 2014 (19:04 IST)

ஐ. நாவுக்கான மனித உரிமை ஆணையத் தலைவராக ஜோர்டன் தூதர் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டன் தூதர் செயித் அல் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் கடந்த 2012 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது ஐ.நா வுக்கான ஜோர்டன் நாட்டின் தூதர் செயித் அல் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர்  பான் கி மூன் அறிவித்துள்ளார்.
 
ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன், ஜான் ஹாட்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்.