தொடர்புடைய செய்திகள்
- முதல்முறையாக இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைவு.. இப்படியே போனால் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும் என எச்சரிக்கை...!
- தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?
- 34வது மாடியில் பிளாட் வாங்கிய நபர்.. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த பில்டிங்கில் மொத்தமே 32 மாடி என்று.. ரியல் எஸ்டேட் மோசடி...
- இஸ்ரேலும் ஈரானும் உடனே சண்டையை நிறுத்துங்க!.. டிரம்ப் சொல்வது நடக்குமா?..
- இந்தியர்களே உடனடியாக வெளியேறுங்கள்: ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கை!
ஐபோனால் தான் பிறப்பு விகிதம் குறைந்ததா? 128 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு...
உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் என்று கருதப்பட்ட நிலையில், தற்பொழுது ஐபோன் மற்றும் நவீன ஸ்மார்ட்போன்களின் வருகையே இதற்கு முக்கியக் காரணம் என்று இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 2007 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் ஐபோன் பயன்பாடு அதிகரித்த இடங்களில்தான் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் வரவால் இளைஞர்கள் நேரில் சந்தித்து பேசுவது 44 சதவீதம் குறைந்துள்ளதோடு, அவர்களின் பாலியல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன. அதற்கு மாற்றாக இணையதளங்களில் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் இரட்டிப்பாகியுள்ளது. மேலும், தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வும், கருத்தடை முறைகள் பற்றிய தகவல்களும் ஸ்மார்ட்போன்கள் மூலம் எளிதாக கிடைத்ததும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.
யுனிவர்சிட்டி ஆஃப் சின்சினாட்டி பொருளாதார வல்லுநர்கள் 128 நாடுகளில் நடத்திய மற்றொரு ஆய்விலும், கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலைகள் வேறுபட்டிருந்தாலும், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த அனைத்து நாடுகளிலும் ஒரே காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வேகமாக சரிந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, இந்தியா போன்ற நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத் தாக்கத்தால் பிறப்பு விகிதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
Edited by Siva
