பிணைக்கைதிகளை குண்டு வைத்து கொன்ற 4 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)


Suresh| Last Updated: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:59 IST)
ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 4 வயது சிறுவன் காருக்குள் அடைக்கப்பட்ட பிணைக்கைதிகளை குண்டு வைத்து கொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

 

 
ஐ.எஸ் தீவிரவாதிகள் 3 பிணைக் கைதிகள் வெடிகுண்டு நிரம்பிய காருக்குள் அடைத்து வைத்து 4 வயது சிறுவனால் வெடிக்கச் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
அது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வீடியோவில், 4 வயது சிறுவன் ஐ.எஸ். தீவிரவாதிகள் சீருடை அணிந்துள்ளான்.
 
அந்த சிறுவனின் கையில் ரிமோட் உள்ளது. அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்ட ஒரு காரில் ஆரஞ்சு நிற உடை அணிந்த பிணைக் கைதிகள் 3 பேர் கட்டப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சிறுவன் தனது கையில் வைத்திருக்கும் ரிமோட்டை அழுத்தி அந்த வெடிகுண்டை வெடிக்க செய்கிறான்.
 
அப்போது, அந்த கார் சுக்கு நூறாக வெடித்துச் சிதறுகிறது. அதனுடன் சேர்ந்து பிணைக் கைதிகளும் உடல் சிதறி உயிரிழக்கின்றனர்.
 
அந்த 4 வயது சிறுவனின் பெயர் ஏசா டேர் என்றும் அவனது தாத்தாவுடன் சேர்ந்து,  ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் அவன் இணைந்ததாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ,


இதில் மேலும் படிக்கவும் :