வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 8 ஜூன் 2016 (13:13 IST)

புனித ரமலான் நோன்புக்கு "தடை"

புனித ரமலான் நோன்புக்கு "தடை"

புனித ரமலான் நோன்பு கொண்டாட இஸ்லாம் மக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. 
 

 
சீனாவில் ஒரு பகுதியில் உகர்ஸ் இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில்,  அரசு துறை அதிகாரிகளுக்கு சீன அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
 
அதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ரமலான் நோன்பு இருக்கக் கூடாது என்றும், விருந்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.
 
இஸ்லாம் மக்கள் புனித ரமலான் நோன்பு தருணங்களில் வியாபாரம் பார்ப்பதும், கடை விடுமுறை அளிப்பதும் அவர்களது விருப்பம் என தெரிவித்துள்ளது.
 
இதனால், சீனாவில் உள்ள இல்ஸாம் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.