டிரம்பை வதம் செய்யும் புகைப்படம்: கமலா ஹாரீஸ் மருமகளுக்கு கண்டனம்

கமலா ஹாரீஸ் மருமகளுக்கு கண்டனம்
siva| Last Updated: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:56 IST)
கமலா ஹாரீஸ் மருமகளுக்கு கண்டனம்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் உதவி அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் மருமகள் பதிவு செய்த ஒரு புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கமலா ஹாரிஸ் மருமகள் மீனா தனது டுவிட்டர் பதிவில் கமலா ஹாரிஸை துர்க்கை கடவுள் போலவும் டிரம்பை மகிசாசுரன் போலவும் உருவகப்படுத்தி டிரம்பை கமலா ஹாரிஸ் வதம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்திற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க இந்துக்கள் இதற்காக மீனாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்துக்களுக்கு எதிராக அவதூறாக மீனா இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளதாகவும் இதனால் மீனா ஹாரிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
அமெரிக்காவில் வாழும் இந்து அமைப்புகள் திடீரென கமலாவுக்கு எதிராக கொந்தளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :