இந்தியாவில் அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ரத்து: பாகிஸ்தான் இசை கலைஞர் அறிவிப்பு

Caston| Last Modified புதன், 4 நவம்பர் 2015 (18:43 IST)
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் இசைக் கலைஞர் குலாம் அலி இந்தியாவில் எனது அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.
கடந்த மாதம் மும்பையில் நடைபெறவிருந்த இவரது இசை கச்சேரி சிவசேனாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்தது. இதையடுத்து.

இந்நிலையில் வேறு மாநிலங்களில் அவருக்கு இசை நிகழ்ச்சி நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து குலாம் அலி இன்று செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், மும்பை மட்டுமல்ல இந்தியாவின் பிற நகரங்களிலும் தான் நடத்தவிருந்த அனைத்து கச்சேரிகளையும் ரத்து செய்துவிட்டாக கூறியுள்ளார். இந்தியாவில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் என்னை காயப்படுத்தியுள்ளது. எனவே இப்போதைக்கு நான் இந்தியாவிற்கு வருவதாக இல்லை. நான் ஒரு பாடகன், நான் இசையைப் பற்றி பேசுபவன். மாறாக அரசியலை அல்ல என்று கூறிய அவர் இந்திய ரசிகர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குலாம் அலியின் இந்த அறிவிப்பு நாட்டில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :