சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் ஜெர்மனி உலக சாதனை: ஒரு மணி நேரத்தில் 24.24 ஜிகாவாட் மின்சாரம்

சூரிய ஒளி மின்சாரம், ஜெர்மனி, உலக சாதனை, மின்சாரம், Germany, solar power
Annakannan| Last Modified வெள்ளி, 27 ஜூன் 2014 (14:21 IST)
ஒரு மணி நேரத்தில் 24.24 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து ஜெர்மனி சாதனை படைத்துள்ளது. இந்த மின்சாரம் ஜெர்மனியின் மொத்த மின்சாரத் தேவையில் 50% என்பது குறிப்பிடத்தக்கது.


 
ஜெர்மனியின் Fraunhofer என்ற தனியார் நிறுவனம், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் அமைத்துள்ள பிரமாண்டமான சூரிய ஒளி உற்பத்தி மையத்தில் 2014 ஜூன் மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியில் இருந்து 2 மணி வரை உள்ள இடைவெளியில் உள்ள ஒரு மணி நேரத்தில் 24.24 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்தி சாதனை படைத்துள்ளது. 
 
இதற்கு முன்னர் 23.1 GW மின்சாரம் உற்பத்தி செய்ததே சாதனையாகக் கருதப்பட்டது. ஜெர்மனியில் தற்போது வெயில் 37C அளவுக்கு அடிப்பதால் இந்த உற்பத்தி சாத்தியமாயிற்று என்று கூறப்படுகிறது. Fraunhofer மேலாளர் இது குறித்துக் கூறும்போது, ‘இந்தச் சாதனையை இன்னும் ஒரே மாதத்தில் நாங்களே முறியடிப்போம் என்று கூறினார்.
 
ஜெர்மனியின் டிரேட், இன்வெஸ்ட் [Germany Trade & Invest (GTAI)] அமைப்பின் தகவலின் படி, 2014ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஜெர்மனியின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திறன், 2013ஆம் ஆண்டின் இதே காலத்தை விட, 34 சதம் அதிகரித்துள்ளது.
 
ஐரோப்பாவில் கடந்த ஆண்டை விட 16 சதவிகிதமும் ஒட்டுமொத்த உலகிலும் 59 சதவிகிதமும் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. 
 
ஆனால், உற்பத்தியாகும் மின்சாரத்தை எவ்வாறு சேமிப்பது என்பதே இப்போது நடைபெறும் விவாதம் ஆகும். ஜெர்மனியிலும் மின் சேமிப்புத் திறன் குறைவாகவே உள்ளது. 
 
சூரிய ஒளி மின் உற்பத்தியில் ஜெர்மனி முதலிடம் வகித்து வருகையில், அதற்கு அடுத்துச் சீனா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பால், ஜெர்மனியில் மின் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :