1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (20:56 IST)

பிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டால் விரைவில் மரணம்; அதிர்ச்சி தகவல்

பிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவோர் மற்றவர்களை விட விரைவில் மரணமடைய வாய்ப்புள்ளது என அய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் பிரென்ச் ஃப்ரைஸ்யால் விரைவில் மரணமடைய வாய்ப்புள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வில் 4440 பேர் ஈடுப்படுத்தப்பட்டனர். அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 14 கிலோ பிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டனர். கடந்த 8 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் பருமன், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 236 பேர் மரணமடைந்துள்ளனர். 
 
நாம் சினிமாவுக்கு சென்றால் அங்கு பெரும்பாலும் சாப்பிடக்கூடியது இந்த பிரென்ச் ஃப்ரைஸ்தான். எனவே இந்த பிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.