வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2016 (10:20 IST)

4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்: 263 ஆண்டு சிறை தண்டனை

4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்

அமெரிக்காவில் நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறையினருக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிலா. கடந்த 2013 ஆம் ஆண்டு அந்நகரில் காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
 
அவர் தனது பதவியைக்காட்டி, மிரட்டி நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர்மீது புகார் எழுந்தது.
 
இதைத் தொடர்ந்து, கடந்த 2015 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட டேனியலுக்கு எதிராக ஒக்லஹோமா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
 
இவர், வறுமை நிலையில் உள்ள இளம் பெண்கள் மற்றும் அமெரிக்க - கருப்பினத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைத்து, பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த வழக்கில் அவருக்கு எதிராக 13 பெண்கள் சாட்சி அளித்தனர். அவர் மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
 
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேனியல் ஹோல்ட்ஸ்கிலாவிக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.