இலங்கை கடலில் மிதக்கும் பிணங்கள் : சென்னை மழை வெள்ளத்தில் இறந்தவர்களா என அதிர்ச்சி


Murugan| Last Modified திங்கள், 7 டிசம்பர் 2015 (14:25 IST)
இலங்கையின் திரிகோணமலை கடற்பரப்பில் ஏராளமான சடலங்கள் கரை ஒதுங்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
 
இந்த தகவல் வெளியானதும், இலங்கை காவல்துறை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த கடற்பரப்பில் மொத்தம் ஐந்து மனித உடல்கள் மிதப்பதாகவும், அவற்றில் இரண்டு பெண்களின் உடல்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனாலும் அந்த தகவல் இன்னும் இலங்கை அரசால் உறுதி செய்யப்படவில்லை. 
 
இதற்கிடையில், இன்று காலை கரை ஒதுங்கிய சடலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கால் டாக்சி ஓட்டும் பூமிதுரை என்பவரின் அடையாள அட்டை இருந்தது. 
 
ஒருவேளை, சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மரணமடைந்து, திரிகோணமலை கடற்கரைக்கு அடித்து செல்ல பட்டவர்களாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த செய்தி சென்னை வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :