வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (17:35 IST)

இராணுவத்துடன் பேசி சிரித்த மாணவிகள்; எச்சரித்த முதல்வர்

கல்லூரி மாணவிகள் இராணுவத்துடன் பேசி சிரித்ததால் பெற்றோர்களை அழைத்து கல்லூரி முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல கல்லூரி ஒன்றான நெல்லியடி மத்திய கல்லூரியில் சுவாரஸ்யமான சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது. இரண்டாம் சமஸ்டருக்கான வகுப்புகள் ஆரம்பித்த சமயத்தில், கல்லூரியிலிருந்து பல பெற்றோர்களிற்கு கடிதம் சென்றுள்ளது.
 
அனைத்து கடிதங்களும் மாணவிகளின் பெற்றோர்களுக்கே அனுப்பப்பட்டிருந்தன. அதில் குறிப்பிட்ட தினத்தில் அவர்களை கல்லூரிக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்துள்ளது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
 
ஏனெனில், சமஸ்டர் தேர்வில் குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் பெற்றோர்களை தான் அழைப்பது வழக்கம். தற்பொழுது எதற்காக அழைக்கிறார்கள் என மாணவிகளின் பெற்றோர்கள் தலையை பிய்த்துக் கொண்டு சென்றுள்ளனர். 
 
ஆனால் மானவிகளின் பெற்றோர்களுக்கு கல்லூரி முதல்வர் தெரிவித்தாவது, அண்மையில் பாடசாலையில் நடந்த நிகழ்வொன்றில் ராணுவத்தினர் வான வேடிக்கைகளை காட்டியதாகவும் இந்த நிகழ்வுக்கு கல்லூரி மாணவிகள் பலர், தங்களது தலை முடிகளை அவிழ்த்து விட்டு வந்ததாக கூறியுள்ளார்.
 
மேலும், இராணுவத்தினருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாகவும், இதற்காகவே அவர்களை அழைத்து எச்சரித்ததாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். விஷயத்தை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் முனுமுனுத்தபடி சென்றனர்.