மரணத்திற்கு பிறகும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியுமாம்!


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (15:37 IST)
ஃபேஸ்புக்கை பயண்படுத்திய ஒருவர் இறந்த பிறகும், அவருடைய கணக்கை மற்றொருவர் பயண்படுத்த முடியும்.
 
ஃபேஸ்புக்கை பயண்படுத்திய ஒரு நபர் இறந்த பிறகு, அவரது பேஸ்புக் கணக்குகளை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
 
'மரபுவழி தொடர்பு’ (legacy contact) என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் அக்கவுண்டை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ பயண்பாட்டாளராக நியமித்துக் கொள்ளலாம். 
 
நாம் நியமித்த அந்த பயண்பாட்டாளர், நமது மரணத்திற்கு பிறகு நம்முடைய பேஸ்புக் அக்கவுண்டில் சுய தகவல்களை (profile information) மாற்றிக் கொள்ளலாம், ஃபேஸ்புக்கின் அட்டைப் படத்தை (cover photo) மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களின் வேண்டுகோள்களை (request) ஏற்றுக்கொள்ளவோ (accept) அல்லது மறுக்கவோ (reject) முடியும்.
 
மேலும், பதிவுகளை (post) சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், நமக்கு அனுப்பபடும் தனிப்பட்ட செய்திகளை (private message) மட்டும் அவரால் படிக்க முடியாது. இந்த புதிய வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
தற்போது, இறந்தவரின் ஃபேஸ்புக் கணக்குகளை மற்றவர்கள் பார்வையிட மட்டுமே முடியும். ஆனால் யாரும் அந்த கணக்கை நிர்வகிக்கவோ அல்லது தகவல்களை திருத்தவோ அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :