2 பில்லியன் ஆண்டுகளில், பூமி மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும்: திடுக்கிடும் தகவல்

earth became water world in 2 billion years
Ilavarasan| Last Modified செவ்வாய், 14 ஜூலை 2015 (21:05 IST)
2 பில்லியன் ஆண்டுகளில், பூமி மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

லண்டன் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இதுகுற்த்து மேலும் கூறியதாவது, சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது.

தற்போது கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருகிறது. கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், 2 பில்லியன் ஆண்டுகளில், பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :