வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (01:17 IST)

குள்ள ஜோடியின் காதல் கதை!

குள்ள ஜோடியின் காதல் கதை!

பிரேசில் நாட்டை சேர்ந்த கட்யுசியாஹோசினோ மற்றும் பவ்லோ கேபிரியல் டி சில்வா இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.


 


சமூகவலைத்தளம் ஒன்றின் மூலம் சந்தித்துக்கொண்ட இருவரும், சாட்டிங் மூலமாக பேச ஆரம்பித்து 2 மாதங்களுக்கு பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்தனர். பின்னர், பவ்லோ தனது வாகனத்தில் 186 கி.மீ. தூரம் தனியாக பயணம் மேற்கொண்டு கட்யுசியாவை சந்தித்துள்ளார். பவ்லோவின் குணம் தன்னை ஈர்த்தாலும், 18 மாதங்களுக்கு பின்னர் அவரது காதலை ஏற்றுக்கொண்டதாக கட்யுசியா தெரிவித்தார்.