தொடர்புடைய செய்திகள்
- OTT Review: ராஜீவ்காந்தி கொலை! ஒரு பக்கமாக நகரும் கதை? தமிழ் மேல் என்ன வன்மம்?! - தி ஹண்ட் விமர்சனம்!
- இம்ரான்கானை சிறையிலேயே கொலை செய்ய ஆசிப் முநீர் திட்டம்: சகோதரி அதிர்ச்சி குற்றச்சாட்டு
- ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்ஷன் என்ன?
- மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!
- காந்தி கொல்லப்பட்டதை ஆர்எஸ்எஸ் கொண்டாடினார்கள்: செல்வப்பெருந்தகை
இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!
அமெரிக்காவில் கத்தோலிக்க பள்ளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்ட நிலையில், முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில் இந்தியா குறித்து இடம்பெற்றிருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மினோபொலிஸ் நகரில் அனுசியேஷன் கத்தோலிக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பள்ளிக்குள் நுழைந்த ராபின் வெஸ்ட்மேன் என்ற நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 மாணவர்கள் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அந்த நபரை சுட்டுப் பிடிக்க முயற்சித்த நிலையில் அவர் பலியானார். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முன்னதாக வெஸ்ட்மேன் தன்னுடைய துப்பாக்கி, தோட்டா மேகசின் உள்ளிட்டவற்றில் எழுதி வைத்திருந்த வாசகங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் ட்ரம்ப்பை சுட்டுக் கொல், உங்கள் கடவுள் எங்கே? என்று பல வாசகங்களும், சில வாசகங்கள் ரஷ்ய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.
அதில் ஓரிடத்தில் Nuke India என்று அவர் எழுதி வைத்துள்ளார். அதாவது இந்தியாவை அணு ஆயுதத்தால் அழிக்க வேண்டும் என் பொருள் தரும்படி எழுதியுள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்தியா குறித்து அவ்விதம் எழுதியிருந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்து அமெரிக்க புலனாய்வு துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Edit by Prasanth.K
