வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (16:43 IST)

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிக்கு பதிலாக கழுதை இறைச்சியா? ஒரு அரசே கவிழும் அபாயம்

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிக்கு பதிலாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்பட்ட ஊழல் வழக்கில் கிர்கிஸ்தான் அரசு கவிழும் அபாயம் உள்ளது.
 
கிர்கிஸ்தான் நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சிக்கு பதிலாக கழுத்தை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, எதிர்கட்சிகள் அரசு மீது ஊழல் குற்றசாட்டை சுமத்தியுள்ளன.
 

 
கழுதை இறைச்சிகளை சாப்பிடுவதை கிர்கிஸ்தான் மக்கள் அவமானமாக கருதுகிறார்கள். இந்நிலையில் கழுதை இறைச்சி ஊழல் என்பது ஒரு அரசு கவிழும் வகையில் மக்களிடையே சீற்றத்தையும் வெறுப்பையும் தூண்டியுள்ளது.
 
எனவே  இந்த ஊழலில் இருந்து விடுபட, நாட்டின் பாராளுமன்ற குழு தற்போது அந்நாட்டு அரசுக்கு வருகிற மார்ச் மாதம் வரையில் அவகாசம் வழங்கியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்.
 
இந்த கழுதை இறைச்சி கடந்த 24 ஆம் தேதி கிர்கிஸ்தானின் பண்ணைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை உள்ளூர் ஊடகங்கள் சுட்டிகாட்டி உள்ளன. இறந்த கழுதைகளின் படங்களையும் காட்டி உள்ளன. மேலும், இறந்த கழுதைகளின் இறைச்சிகள் அங்குள்ள ஓட்டல்களுக்கு அனுப்படுவதாகவும் தெரிவித்திருந்தன.