1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump plan to pass the bill tax on india

இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது!..

donald trump
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவு இறக்குமதி வரிகளை விதித்தார். ஒருகட்டத்தில் வரிகளை ஏற்றிக்கொண்டே போனார்.

ஆனால், டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அதன்பின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இந்தியாவுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் குறைத்தார்.

இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா சீனா இரண்டு நாடுகளுக்கும் 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறார். இது தொடர்பாக புதிய மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது. அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா அமெரிக்காவின் இரு கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாவதற்கான முதல் படியை எட்டியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மெகா ஸ்கெட்ச் போட்ட வைகோ.. எஸ்கேப் ஆகிய விஜய்!.. பிளான் பணால் ஆயிடுச்சே!..