தீவிபத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றி உயிரை விட்ட நாய்


Abimukatheesh| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (19:04 IST)
அமெரிக்கா பால்ட்டிமோரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய் உயிரிழந்தது.

 

 
அமெரிக்காவின் பால்ட்டிமோரைச் சேர்ந்த எரிக்கா போர்ம்ஸ்கி என்பவர் அவரது குழந்தை மற்றும் வளர்க்கும் நாயை வீட்டில் விட்டு வெளியே சென்றுள்ளார்.  
 
அப்போது வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் எரிக்காவும் வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டுக்குள் யாரும் செல்லாத அளவுக்கு தீ எரிந்து கொண்டிருந்தது.
 
தீயணைப்பு படையினர் தீயை அனைத்து விட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, நாய் குழந்தையின் மேல் தீயில் கருகி இறந்த நிலையில் இருந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற, அதன் மேல் ஏறி படுத்துள்ளது. இதனால் குழந்தை லேசான தீ காயத்துடன் உயிருடன் இருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :