வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2016 (18:34 IST)

இந்தியாவில் வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: ஐ.நா

இந்த ஆண்டு இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஐ.நா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 52 லட்சம் வெளிநாட்டவர் வசிக்கின்றனர்.


 
 
இது கடந்த 1990 ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தை விட 23 லட்சம் குறைவு. 1990 இல் 75 லட்சமாக இருந்த வெளிநாட்டவர்கள் 2016 இல் 52 லட்சமாக குறைந்துள்ளது.
 
உலகள் நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றானர்.
 
1990 ஆண்டு கணக்கின் படி இது 67 லட்சம் அதிகமாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களில் மெக்சிக்கோ, ரஷ்யா, சீனா, வங்கதேசத்தினர் ஆகியோர் இந்தியாவை அடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
அதிக வெளிநாட்டவர்களை தன் வசம் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ஜெர்மனி, ரஷிய, சவுதி அரேபியா நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 12 வது இடத்தில் உள்ளது.