செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 18 மே 2015 (16:48 IST)

பல பெண்களுடன் தொடர்பு: கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடனான காதலை முறித்த ஷாய்க்

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2014 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யபட்டுள்ளார். இவர் ரஷ்ய மாடல் அழகியான இகினா ஷாய்க் என்ற 29 வயது மாடல் அழகியை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இதற்கிடையே கடந்த ஓராண்டாக அவர்களுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காதலி இகினா ஷாய்க் தனது காதலை முறித்து கொண்டு ரொனால்டோவை விட்டு பிரிந்து விட்டார். இவர்கள் இருவரும் காதலித்தபோது இகினாவின் செல்போனுக்கு பெண்கள் செய்தி அனுப்பினர். அதில் ரொனால்டோவுக்கு தங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
 
அதைத்தொடர்ந்து ரொனால்டோவின் செல்போனை இகினா சோதனை செய்தபோது அந்த தகவல் உறுதியானது. அதைத் தொடர்ந்து இகினா தனது காதலர் ரொனால்டோவை நிரந்தரமாக பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தற்போது ஹாலிவுட் நடிகர் பிரட்லி ஹூப்பருடன் மாடல் அழகி இகினா ஷாய்க்கும் சுற்றி திரிவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
 
ரொனால்டாவிற்கு தற்போது புதிய காதலி கிடைத்துள்ளதாகவும் தற்போது அவருடன் தான் நிறைய நேரம் செலவழிப்பதாக போர்ச்சுகீசிய பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. ரொனொல்டோவின் புதிய காதலி பெயர் லூசியா என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.