அச்சுறுத்தும் கொரோனா; இத்தாலியில் ஒருவர் பலி

Arun Prasath| Last Modified சனி, 22 பிப்ரவரி 2020 (12:57 IST)
கொரோனா வைரஸால் இத்தாலி நாட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதிவேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கிட்ட தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே, 2200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 75,465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் 78 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று ஈரானில் 4 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்த நிலையில், தற்போது இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :