மத்திய கல்வித்துறை அமைச்சருக்குக் கொரொனா உறுதி !

Ramesh Pokhriyal
Sinoj| Last Modified புதன், 21 ஏப்ரல் 2021 (16:23 IST)

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :