இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை- கொரொனா தொற்று சோதனை முடிவில் ஆச்சர்யம்!

Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (10:19 IST)

இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட குழந்தை ஆரோக்யமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அந்த நாட்டின் இளவரசர சார்லஸ் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கே கொரோனா தொற்று பரவியுள்ளது. இளவரசருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமாக போரிஸ் ஜான்சன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரொனா தொற்று இருந்த கர்ப்பிணி ஒருவர் இறந்துவிடவே அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர். அந்த குழந்தைக்குக் கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்ய கொரோனா இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.

இங்கிலாந்தில் இதுவரைக் கொரோனாவுக்கு 60000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே இறப்பு எண்ணிக்கை 7097 ஆக உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :