முஸ்லிம்கள் முழுமையான முகத்திரையை அணிய காங்கோவில் தடை

முஸ்லிம்கள் முழுமையான முகத்திரையை அணிய காங்கோவில் தடை
Last Modified வெள்ளி, 1 மே 2015 (19:25 IST)
முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமிய முகத்திரையை பொது இடங்களில் அணிந்து வருவதை காங்கோ ஜனநாயகக் குடியரசு தடை செய்துள்ளது.


 
அதேபோல வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இரவு நேரத்தை பள்ளிவாசல்களில் செலவழிப்பதையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
 
தீவரவாத செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவுகள் எனவும் அரசு கூறுகிறது.
 
அண்டை நாடான மத்திய ஆப்ரிக்க குடியரசில் இடம்பெறும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறுபவர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்குள் வந்து அங்குள்ள பள்ளிவாசல்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
 
காங்கோ பிராசிவில்லே நாட்டில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர்.
தீவிரவாதத்தை தடை செய்யும் நோக்கில், இப்படியான நடவடிக்கைகளை அந்தப் பிராந்தியத்தில் முன்னெடுக்கும் முதல் நாடு காங்கோ ஜனநாயகக் குடியரசே.


இதில் மேலும் படிக்கவும் :