வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2014 (16:13 IST)

காலணி ஈரமாகாமல் இருக்க உதவியாளர் மீது ஏறிச்சென்ற அரசு அதிகாரி

சீனாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களை பார்வையிட சென்ற அரசு உயர் அதிகாரி ஒருவர், அவரது காலணி நீரில் ஈரமாகாமல் இருக்க  உதவியாளர் முதுகின் மீது ஏறிச்சென்ற புகைப்படம் வெளியானதால், அந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் கடந்த 18 ஆம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 26 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், வெள்ளத்தால் ஜியாங்க்சி பகுதியில் பாதிப்படைந்த இடங்களை பார்வையிட வந்த அரசு உயர் அதிகாரி வாங் ஜுங்க்ஹுவா என்பவர், அவர்  காலணி நீரில்  ஈரமாகாமல் இருக்க உதவியாளர் திங் சியன்போ என்பவரிடம் தன்னை சுமந்து செல்லும்படி கூறியுள்ளார்.
 
இதனால், அதிகாரியை உதவியாளர் அவரது முதுகில் சுமந்து சென்றுள்ளார். இதனை புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் அதனை இணையத்தில் வெளியிட, அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.