நான்கு கை, கால்களுடன் பிறந்த குழந்தை

Geetha Priya| Last Modified செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (16:09 IST)
சீனாவில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு நான்கு கைகள் மற்றும் கால்கள் இருந்தன. இக்குழந்தையை பரிசோதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெற்றிகரமாக கைகள் மற்றும் கால்களை பிரித்தெடுத்தனர். 
ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி பிறந்த இந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், கருவில் இரட்டை குழந்தைகளாக இருந்த குழந்தைகளில் ஒன்று சரியான வளர்ச்சி பெறாததால் மற்றொரு குழந்தையின் உடலில் அதிக எண்ணிக்கையில் கைகள் மற்றும் கால்கள் வளர்ந்துள்ளதாக தெரிவித்தனர். 
 
இக்குழந்தை பிறந்த போது 3 கிலோ எடையுடன் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நிமோனியா மற்றும் இதய நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக குழந்தையின் தந்தை சென் கூறுகையில் எனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது 5 பரிசோதனை மையம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று பரிசீலனை செய்தோம். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் குழந்தை இயற்கைக்கு மாறாக உள்ளது என்று தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :