வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 24 ஜூன் 2015 (00:38 IST)

தீவிரவாதி லக்வி விவகாரம்: ஐநாவில் இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி விவகாரத்தில், ஐநாவில் பாகிஸ்தான் மீது இந்தியா கொண்டு வந்த குற்றச்சாட்டு முயற்சியைச் சீனா முடக்கியது.
 

 
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில், கொடூர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை படுகொலை செய்தனர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தினர். 
இத் தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வழிநடத்தியது லக்வி என்று பரபரப்பு தகவல் வெளியானது.
 
இதனையடுத்து, மும்பை தாக்குதல் வழக்கில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், லக்வி மீதும், அவரது சகாக்கள் 6 பேர் மீதும் இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
 
இந்நிலையில், லக்விக்கு கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து.
 
இதனால், அவரைப் பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டப் பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் அந்தச் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டதை ரத்துச் செய்து லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ராவல்பிண்டி அடியலா சிறையில் இருந்து லக்வி விடுதலை செய்யப்பட்டார்.
 
லக்வி விடுதலைக்கு, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டம் தெரிவித்தன.
 
இது குறித்து ஐநா பாதுகாப்பு சபையின் கீழ் இயங்கும் அல்கொய்தா தடை குழுவின் தலைவர் ஜிம் மெக்லேவுக்கு, ஐநாவுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி விரிவாகக் கடிதம் எழுதினார்.
 
இதனையடுத்து, லக்வி விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் விளக்கம் அளிக்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையின் பேரில் ஐநா தடை விதிப்பு கமிட்டி கூடியது.
 
ஆனால், போதுமான ஆவணங்களை இந்தியா வழங்கவில்லை என்று கூறி இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை சீன அதிகாரிகள் குழு போட்டது. சீனாவின் இந்தச் செயல் இந்தியாவிற்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.