தொடர்புடைய செய்திகள்
- ஸ்ஸ்ஸப்பா முடியல!.. உடலில் துர்நாற்றம்!. 3 வருஷ மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்த ஜிம்!..
- 5.04 கோடி ரூபாய்மதிப்புள்ள ஆடம்பர காரில் சறுக்கு விளையாடி சேதப்படுத்திய சிறுவர்கள்... பெற்றோர் மீது வழக்கு...
- நீட் தேர்வில் கடைசி நிமிட பரபரப்பு: தவறுதலாக வேறு மையத்திற்கு சென்ற மாணவருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!
- விண்வெளியிலிருந்து வயர்லெஸ் மூலம் மின்சாரத்தை பூமிக்கு கடத்தி சோதனை!.. சீனா வெற்றி!...
- 4 கோடி காரில் சென்று பாத்திரம் கழுவும் வேலை செய்யும் சீன பெண்!. இணையத்தில் வைரல்..
குழந்தை இல்லாத தம்பதி.. இறப்பதற்கு முன் மொத்த சொத்தையும் என்ன செய்தார்கள் தெரியுமா?
சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியரான டு யிங்ராங் மற்றும் லு சுயீங் ஆகியோர், தங்களின் எளிய வாழ்க்கைக்கு பின்னால் ஒரு உன்னதமான மனிதாபிமான பொக்கிஷத்தை விட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பான சுமார் 7 கோடி ரூபாய் பணத்தை பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தத் தொகையின் மூலம் 455 குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளது.
ஆசிரியராகப் பணியாற்றிய கணவர் டு 2018-லும், மருத்துவராகப் பணியாற்றிய மனைவி லு கடந்த 2025 ஆம் ஆண்டிலும் காலமானார்கள். பழைய மரச்சாமான்கள் மற்றும் எளிய வசதிகளுடன் ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த இவர்கள், 2018 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றில் பார்த்த சுவரொட்டியால் ஈர்க்கப்பட்டு இந்த பெரும் தொகையைத் தானமாக வழங்க முடிவு செய்தனர்.
இவர்களின் வீட்டைப் பார்வையிட்ட அறக்கட்டளை ஊழியர்கள், தங்களின் வயோதிக காலத்திற்காகக் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியபோதும், "எங்களுக்கு அதிக பணம் தேவையில்லை, எஞ்சிய வாழ்நாளை ஓய்வூதியத்தைக் கொண்டே கழித்து விடுவோம்" என்று கூறி முழுத் தொகையையும் வழங்கினர்.
ஒரு வேளை உணவை இருவராகப் பகிர்ந்து உண்ணும் அளவிற்கு எளிமையாக வாழ்ந்த இத்தம்பதியினர், கல்வி மற்றும் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கும் தொடர்ந்து நிதியுதவி செய்துள்ளனர். தங்களின் இறுதி விருப்பப்படி, கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. தங்களின் சேமிப்பு முழுவதையும் அடுத்த தலைமுறையின் இருதயத் துடிப்பிற்காக அர்ப்பணித்த இவர்களது கொடை உள்ளம் உலகையே நெகிழ்த்தியுள்ளது.
Edited by Siva
