போரால் பாதிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் அமர்ந்திருக்கும் சிறுவன்(வீடியோ)


Abimukatheesh| Last Modified வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (17:36 IST)
சிரியா போரில் பாதிக்கப்பட்ட சிறுவன் முகத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கிருந்து மக்கள் அதிக அளவில் வெளியேறி அகதிகளாக வேறு நாட்டுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 
 
இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் முகத்தில் ரத்தம் வடிய இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நன்றி: CNN


இதில் மேலும் படிக்கவும் :