பிப்ரவரி 5: இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 22 ஜனவரி 2016 (06:38 IST)
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  பிப்ரவரி 5 ஆம் தேதி இலங்கைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
சமீபத்தில், பாராளுமன்றத்தில் மீனவர் பிரச்சனை குறித்து குறித்து ஆவோசனை செய்ய விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ள அவர், பிப்ரவரி 5 ஆம் தேதி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். பிப்ரவரி 6 ஆம் தேதி, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஈழத்தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை போன்றவைகள் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :