1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (15:36 IST)

சனி கிரகத்தின் புதிய நிலா கண்டுபிடிப்பு

சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அக்கிரகதிற்கு அனுப்பப்பட்ட காசினி விண்கலம், சனி கிரகத்தின் புதிய நிலா என கருதப்படும் ஒரு பொருளின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.  

பூமிக்கு சந்திரனை போல, சனி கிரகத்திற்கு சுமார் 60 துணை கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 
 

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சனி கிரகத்தின் வளையங்களுக்கு இடையே மிகச்சிறிய துணை கிரகம் உள்ளது. 
Peggy என அழைக்கப்படும் அந்த துணை கிரகம் 1200 கி.மீ. நீளமும், 10 கி.மீ அகலத்துடனும் காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு துணை கிரகத்தை சனி கிரகத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.