1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (14:56 IST)

நேபாள கேபிள் டிவியில் இந்திய தொலைக்காட்சிகள் இடைநிறுத்தம்

நேபாள நாட்டின் கேபிள் டிவியில் இந்திய தொலைக்காட்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
நேபாளத்தின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாகக் குறிப்பிட்டு, அடையாள ரீதியில் அதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக நாற்பது இந்திய தொலைக்காட்சிகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தாம் நிறுத்தி வைத்துள்ளதாக நேபாளத்தின் கேபிள் தொலைக்காட்சி நடத்துநர்கள் கூறுகின்றனர்.
 
நேபாளத்துக்குள் பொருட்கள் வருவதை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற வகையில் நிறுத்தி வைத்துள்ளதற்கு தமது எதிர்ப்பைக் காட்டவே இம்முடிவை தாம் எடுத்துள்ளதாக நேபாள கேபிள் தொலைக்காட்சி நடத்துநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இந்திய நேபாள எல்லைக்கு அருகில் வாழும் இனக்குழுக்களின் எதிர்ப்பையும் மீறி நேபாளம் அவசர அவசரமாக அரசியலமைப்பு சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டுவந்துள்ளது என்று இந்தியா விமர்சித்திருந்தது.
 
நேபாளத்துக்குள் பொருட்கள் செல்வதை தாம் தடுப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.
 
பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாகவே நேபாளத்துக்கு பொருட்கள் செல்லவில்லை என அது தெரிவித்துள்ளது.