வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (11:02 IST)

தொழிலதிபர் மனைவி விவகாரத்து - 6 ஆயிரம் கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க தொழிலதிபரின் மனைவிக்கு விவாகரத்து வழக்கியதில் அவருக்கு 6ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹெரால்ட் ஹாம், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரி அமெரிக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 10-11-14 அன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 

 
எண்ணெய் நிறுவனத்தில் ஹெரால்டுக்கு 68 சதவீத பங்கு உள்ளதால் அதில் தனக்கு பாதி பங்குகளை அளிக்க வேண்டுமென்று அன் கேட்டிருந்தார். எண்ணெய் நிறுவனத்தின் அவருடைய பங்கின் மதிப்பு 1லட்சம் கோடி ரூபாயாகும். இதில் எனினும் 6ஆயிரம் கோடி ரூபாயை அவருக்கு வழங்கினால் போதும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
 
இந்த புதிய தீர்ப்பின் மூலம் அமெரிக்க வரலாற்றில், விவாகரத்து வழக்கில் மனைவிக்கு வழங்கப்படும் தொகையில் அதிகமான தொகையை வழங்கியதில் சாதனைப் படைத்துள்ளது. மேலும், இந்தத் தொகையினால் ஹெரால்டின் மனைவி, அமெரிக்காவின் முதல் 100 பணக்கார பெண்களில் ஒருவராக இருப்பார்.